கோவை மக்களை கவர்ந்த வித்தியாசமான "பிரெஞ்ச் டோர்" (French Door) உணவகம்


இளம் வயது சமையலர் ஷீயா ஆட்கா என்பவரால் நிறுவப்பட்ட பிரஞ்ச் டோர் என்ற உணவகத்தில், ஐரோப்ப உணவு வகைகளுடன், சிறிது இந்திய உணவுகளும் தயாரிக்கப்படுகிறது.



மாலைப்பொழுதில் சிரிப்பலைகள் அதிரும்படி அனைவரும் கூடி இருந்த போது, கோவை புத்தகக் கிளப் திரையரங்கு குழுவினரால் தத்துரூபமான நாடகம் அரங்கேற்றப்பட்டது. 



இந்த நாடகமானது, இரண்டு வித்தியாசமான கருத்துக்களை மையமாக கொண்டு நடத்தப்பட்டது. ஒன்று, விமானத்தில் பயணிக்கும் கண்பார்வையற்ற ராணுவ வீரரின் உண்மையான வாழ்க்கை சம்பவம், மற்றொன்றில், அதிக கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளும் நபர்களின் இன்னல்கள்களை விளக்குவதாகும்.



இந்த நாடகத்தினை கண்ட பார்வையாளர்களிடம் மகிழ்ச்சி, சோகம் என அனைத்து விதமான உணர்வுகளையும் காண முடிந்தது. முதல் நாடகத்தின் போது, கண்களில் இருந்து நீர் ஊற்றாக வெளியேறியது. தொடர்ந்து நடந்த 2-வது நாடகத்திலும் பார்வையாளர்கள் கண்களில் இருந்து மீண்டும் நீர் வந்தது. ஆனால், இது வயிறு குலுங்க குலுங்க சிரித்ததால் வந்த நீராகும்.



இந்த நாடகம் குறித்து பிரஞ்ச் டோர் உணவகத்தின் நிறுவனர் ஷீயா ஆட்கா பேசுகையில், கோவை மக்கள் மகிழ்ச்சியுடன் கூடிய பொழுதுபோக்குகளோடு வித்தியாசமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். ரஞ்ச் டோர் உணவகத்தின் வாடிக்கையாளரின் தட்டுகளில் முதலில் வழக்கமான உணவுகளை வைத்து விட்டு, பிறகு சுவையுடன் கூடிய புதிய உணவு வகைகளை அளிக்கும் போது, அவர்களின் உணர்வுகளில் மாற்றம் தெரிகிறது, என்றார்.



இந்த பிரஞ்ச் டோர் உணவத்தில் நாடகத்துடன் கூடிய உணவு என்ற வித்தியாசமான முறை அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இந்த நாடகாமானது புகழ்பெற்ற இரண்டு நாடக நடிகர்களான சாஷி குலாடி மறறும் டீனோ ஹட்டரியா ஆகியோரால் எழுதி இயக்கப்பட்டது.



நாடகம் குறித்து 80 வயதை கடந்த புகழ்பெற்ற நாடக நடிகர் டீனோ ஹட்டரியா பேசுகையில், 1950 ஆம் ஆண்டு நான் கோவை வந்தேன். மும்பையில் அதி மரஸ்பான் என்பவரிடம் நாடக நடிப்பைக் கற்றுக் கொண்டேன். அற்புதமான நபரான அவர் மனிதர்களின் அனைத்து உணர்ச்சிகளையும் நன்கு தெரிந்திருந்தார். அவரிடம் கற்றுக் கொண்டதை தற்போது, நான் இங்கு காட்டியுள்ளேன். இவ்வாறு கூறினார்.

இவரது நாடக குழுவில் இடம் பெற்றிருப்பவர்கள் அனைவரும் நடிப்பில் முழு நேரம் ஈடுபடுபவர்கள் அல்ல. கல்லூரி மாணவர்கள், பணிக்கு செல்பவர்கள் என திறமையானவர்கள் பகுதி நேரமாக நாடகத்தில் நடித்து வருகின்றனர்.



பிரஞ்ச் டோர் உணவத்தின் வாடிக்கையாளர் ஒருவர் கூறுகையில், உணவு உட்கொள்ளும் போது நாடகம் நடத்தப்பட்டது சிறப்பாக இருந்தது. முதல் நாடகத்தில் உணர்வுகளை வெளிக்காட்டும் வகையில் இருந்தது. மற்றொன்றில் 3 உடல் பருமன் கொண்ட பெண்கள் படும்பாட்டை நகைச்சுவையாக காட்டியது நன்றாக இருந்தது. உண்மையில் இது கோவை மக்களுக்கு வித்தியாசமான ஒன்றாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.



Newsletter

உலக மகளிர் தினம்: கோவையின் முதல் பெண் எம்.பி

தேர்தல்களின் போது ஓட்டுக்கு பணம் கொடுக்குமà¯...

பிறந்த குழந்தையும் பசும்பாலும் - ஒரு கண்ணோட்டம்!

பால் என்பது குழந்தைக்கு முதல் உணவு, முக்கிய à®...

2019 - கோவை தேர்தல் களம்: காவி, சிவப்பு மோதல்! வெல்லப்போவது யார்?

கோயம்புத்தூர் மக்களவை தொகுதி முழுவதுமே தொழà®...

2019 - கோவை தேர்தல் களம்: மோடி அலையை கோவையில் கவிழ்த்த உள்ளடி வேலை

கோயம்புத்தூர் மக்களவை தொகுதியில் அதிமுக போà®...

2019 - கோவை தேர்தல் களம்: மாறிய கோவை தொகுதி, மாறாத மக்கள்

15 வது மக்களவை தேர்தலின் போது கோயம்புத்தூர் தà...